இராணுவ மகளீர் படையணிக்கும் புருனே தேசிய அணிகளுக்கும் இடையிலான போட்டிகள்
25th July 2017
இலங்கை இராணுவ மகளீர் படையணி மற்றும் புருனே தேசிய வீராங்கனைகளுக்கு இடையிலான வளைப்பந்தாட்ட போட்டிகள் வியாழக் கிழமை (27)ஆம் திகதி மாலை பனாகொடை இராணுவ உள்ளரங்க மைதானத்தில் இடம்பெற்றது.
பெருமளவு பார்வையாளர்களுக்கு மத்தியில் இரண்டு அணியினருக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் (58) புள்ளிகள் புருனே தேசிய அணி பெற்றுக்கொண்டதுடன் இராணுவ மகளீர் படையணி (50) புள்ளிகள் பெற்றது.
இந்த போட்டியை பார்வையிடுவதற்கு பிரதான விருந்தினராக வருகை தந்த இராணுவத்தின் நிதி பணிப்பாளர் பிரிகேடியர் எச்.ஆர்.ஆர்.பி குணதிலக்க கலந்து கொண்டு விருதுகளையும் பரிசுகளையும் வழங்கினார்.
இலங்கை இராணுவ மகளீர் படையணியின் கட்டளைத் தளபதி மற்றும் இராணுவ வளைப்பந்தாட்ட குழுவினரின் கட்டளைத் அதிகாரி பிரிகேடியர் பிரசன்ன களுயாராச்சி,விளையாட்டு வீரர்கள், படையணிகளின் கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், உட்பட பெரும் திரலானோர் கலந்து கொண்டனர்.
|