குருக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீள் நிர்மானிக்கப்பட்ட கோயில்

25th July 2017

இலுப்பைகுளம், உயிதரசகுளம் மாந்தை பிரதேசத்தில் 542ஆவது படைத் தலைமையகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் பாழடைந்து இடிந்து விழுகின்ற நிலையில் காணப்பட்டதை அவதானித்த அந்த பிரதேசத்தைச சேர்ந்த குருக்கள் இது தொடர்பாக 542ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் என்.பி அகுரன்திலகவை சந்தித்து விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த கோயில் இராணுவத்தினரால் மீள் நிர்மானிக்கப்பட்டது.

மீள் நிர்மானிக்கப்பட்டு; முடிவடைந்த கோயிலில் வைகாசி பொங்கல் மற்றும் விஷேட பூஜைகள் அப்பிரதேச மக்களால் ஒன்றினைந்து குருக்களின் ஒத்துழைப்புடன் நடாத்தினார்கள் இந்த விஷேட பூஜை நிகழ்விற்கு 542 படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி வருகை தந்திருந்தார் அவரை குருக்கள் மற்றும் அப்பிரதேச மக்கள் பொண்ணாடை போர்த்தி வரவேற்றனர். அத்துடன் இராணுவ வீரர்களும் இந்த வழிபாடுகளில்; கலந்து கொண்டனர்.

|