இருக்கும் இராணுவ அங்கத்தவரகள் 42 பேருக்கு சான்றிதழ்கள்
25th July 2017
கலாஒயாவில் அமைந்துள்ள இராணுவ தொழில்துறை பயிற்சி மத்திய நிலையத்தினால் அலுமினியம் உற்பத்தியாளர்,மின்சார கம்பி மற்றும் மின்சார உபகரணங்கள் பராமரிப்பு தொழில் கல்வி பயிற்சிகளை முடித்த 42 இராணுவத்தினருக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு (21)ஆம் திகதி பயிற்சி மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இந்த பயிற்சிகளை முழுமையாக்குவதற்காக இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதுடன் இந்த பயிற்சியாளர்களுக்கு தேசியமட்ட திறமையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு இராணுவ தொழில் பயிற்சி மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் எச்.ஈ.எம்.ஆர்.பீ.டி ஹத்னாஹொட,அநுராதபுரத்தில் அமைந்துள்ள இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் பொறுப்பதிகாரி எஸ்.விமலசிரி மற்றும் தொழில் பயிற்சி மத்திய நிலையத்தின் பிரதான ஆலோசகரினால் இந்த பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
|