யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நாவட்குளி மகா வித்தியாலயம் மாணவர்ளுக்கு புதிய கணனி

24th July 2017

இப்பாடசாலை மாணவர்களின் தகவல் மற்றும் தொழிநுட்ப அறிவை மேம்படுத்தும் நிமித்தம் யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ழூன்று புதிய கணணிகள் கடந்த வியாழக்கிழமை (20) ஆம் திகதி நன்கொடையாக வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிஆராச்சி அவர்களின் வழிகாட்டளுக்கமைவாக 52ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அருன வன்னிஆராச்சியின் தலைமையின் கீழ் நாவட்குளி மஹா வித்தியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வின்போது இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

523 படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் டிகிரி திசாநாயக, 12 ஆவது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் பிரதீப் ரத்நாயக, நாவட்குளி மகா வித்தியாலயத்தின் அதிபர் பவளக்குமாரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

|