இராணுவ ஒத்துழைப்புடன் குடி நீர் வசதி மற்றும் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு

24th July 2017

54 ஆவது படைப் பரிவின் கீழ் இயங்கும் 542ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி என்.ஜீ ஹகுரன்திலக அவர்களின் ஒத்துழைப்புடன் கொழும்பு (Inner Wheel) திணைக்களத்தின் உறுப்பினர்களினால் நன்கொடை வழங்கும் நிகழ்வு மன்னார்,மாந்தோட்டம் பிரதேசத்தின் இழுப்பாய்குளம் கிராமத்தில் இடம் பெற்றது.

பொது மக்கள் குழந்தைகளின் நலன் கருதி முக்கிய தேவைகளின் நிமித்தம் குடி நீர் மற்றும் சைக்கிள்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வானது ஜீலை மாதம் (10) ஆம் திகதி இழுப்பாய்குளம் கிராமத்தில் இடம் பெற்றதோடு 13 சைக்கிள்கள் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இப் பிரதேசத்தில் சேவையில் உள்ள இராணுவ அதிகாரிகள் படையினர் மற்றும் பாடசாலை மாணவர்கள் பொதுமக்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

|