இராணுவத்தின் உதவியுடன் புதிய வீடு நிர்மானிப்பு

21st July 2017

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் மீரிகம ஹவுதம தருவ கட்டிட நிறுவனத்தின் அனுசரனையுடன் மைத்திரிகம வெலிகந்த பிரதேசங்களில் புதிய வீடு நிர்மானிக்கப்பட்டன.

வறிய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அநுர குமார குடிசையில் வாழ்ந்து வந்தார். அவரது நிலைமையை கண்டறிந்து இவருக்கு இந்த வீடு புதிதாக அமைத்து கொடுக்கப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஹவுதம தருவ ஆரியா கட்டிட நிறுவனத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த நிறுவனத்தின் உதவியுடன் இந்த வீடு அமைத்து கொடுக்கப்பட;டன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர, ஹவுதம தருவ கட்டிட நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது பதவி நிலை பிரதானி பிரிகேடியர் அதுல ஹென்னதிகே கலந்து கொண்டனர்.

|