இராணுவ தொழிற் பயிற்ச்சி தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் ஆறாவது தடவையாக இடம் பெற்ற நடமாடும் சேவை
21st July 2017
சாலியவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ தொழிற் பயிற்ச்சி தலைமையகத்தின் தளபதி பிரிகேடியர் எச் ஈ எம் ஆர் பி டி ஹத்னாகொட அவர்களின் ஒருங்கிணைப்புடன் கண்டி ஒப்டிகள்ஸ் (Kandy Opticals (Pvt) Ltd) நிறுவனத்தின் வைத்தியர் நிமல் வீரகோன் உள்ளடங்களாக இந் நிறுவனத்தின் வைத்தியர்களின் அனுசரனையோடு ஆறாவது தடவையாக இந் நடமாடும் சேவையானது கடந்த திங்கட் கிழமை (17) வராவெவ சித்தார்த்த பொதுநல சங்க மண்டபத்தில் இடம் பெற்றது.
பொது மக்களின் தேவை கருதி இடம் பெற்ற இந் நடமாடும் சேவையில் 400ற்கும் மேற்பட்ட பொது மக்கள் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு அதில் 284 பேரிற்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் வராவெவ பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் இராணுவ தொழிற் பயிற்ச்சி தலைமையகத்தின் தளபதி இராணுவ உயர் அதிகாரிகள் கண்டி ஓப்டிகள்ஸ் நிறுவனத்தின் வைத்தியர் குழுவினர் மற்றும் சுகாதார சேவகர்கள் பங்கேற்றனர்.
|