நாவக்குலி மஹா வித்தியாலய மாணவர்களுக்காக குடிநீர் வசதிகள்
19th July 2017
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் வழிக்காட்டலின் கீழ் 522ஆவது படைத் தலைமையகத்தினால் நாவக்குலி மஹா வித்தியாலய மாணவர்களுக்கு குடிநீர் வசதிகள் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட வெசாக் வலயத்தை பார்வையிட வந்த நாவக்குலி மஹா வித்தியாலய மாணவர்கள் தங்களது நீர் வசதியின்மை தொடர்பாக யாழ்ப்பாண பாதுகாப்பு தளபதிக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய 522ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான கேர்ணல் ஹரேந்திர பீரிஸினால் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
பாடசாலை வளாகத்தினுள் நீர் டாங்கி மற்றும் நீர் வடிகாலமைப்பு படைத் தலைமையகத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. ஐய்யக்கச்சியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து இந்த டாங்கிக்கு நீர் விநியோகிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்விற்கு பிரதான விருந்தினராக 522ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி, நாவக்குலி மஹா வித்தியாலயத்தின் அதிபர் எஸ். பவலகுமாரன், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
|