இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் 256 படை வீரர்களின் பயிற்சி வெளியேறும் நிகழ்வு

19th July 2017

ஒழுக்க நிர்வாக 71ஆவது பயிற்சி நெறி மூன்று மாத காலமாக நடைபெற்ற பயிற்சியை பெற்ற இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் வீர வீராங்கனைகள் 256 பேரின் பயிற்சி நிறைவு விழா கிரிதலையில் அமைந்துள்ள பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றது.

இராணுவ பொலிஸ் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரியின் அழைப்பையேற்று இலங்கை இராணுவ ஒழுக்க நிர்வாக பணிப்பாளர் மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் காமினி சிறிசேன இந் நிகழ்விற்கு வருகை தந்து இந்த பயிலியல் படைவீர வீராங்கனைகளுக்கு இராணுவத்தினுள் ஒழுக்கம் சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும் என்று கருத்துக்களை தெரிவித்து சிறப்புரையாற்றினார். அதன் பின்பு பயிற்சியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற படை வீர வீராங்கனைகளுக்கு கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், படை வீரர்கள், பெற் றார்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சியில் பெறுபேறுகளை பெற்ற வீர , வீராங்கனைகளது விபரங்கள் கீழ்வருமாறு

போ/2075683 பயிலிளவ படைவீரர் ஜே.எம்.பீ பிரியநாத் திறமையான பயிலிளவ படைவீரர்

போ/2075534 பயிலிளவ படைவீராங்கனை டப்ள்யூ.வி.ஜி.எஸ்.எம் ஆரியரதன் பயிலிளவ படைவீராங்கனை

போ/2075782 பயிலிளவ படைவீரர் ஜி.பி.எம் கால்லகே திறமையான சூட்டாளராகவும்

போ/2075604 பயிலிளவ படைவீராங்கனை ஜி.ஏ.எச் புஸ்பகுமாரி திறமையான சூட்டு பயிலிளவ படைவீராங்கனை

|