இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் புதிய கட்டளை அதிகாரி பதவியேற்பு
19th July 2017
இலங்கை இராணுவத்தின் ஒழுக்க நிர்வாக பணிப்பாளராக கடமை புரிந்த பிரிகேடியர் காமினி சிறிசேன இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் 8ஆவது கட்டளை அதிகாரியாக தனது கடமையை பொல்லேன்ஹொடவில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் பொறுப்பேற்றார்.
புதிதாக வருகை தந்த கட்டளை அதிகாரியை இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பிரதி கட்டளை அதிகாரி வரவேற்றார். பின்பு படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
சமய வழிபாடுகளின் பின்பு தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றார். பின்பு படைவீரர்களுடன் தேநீர் விருந்தோம்பலில் ஈடுபட்டார். இறுதியாக கட்டளை அதிகாரியினால் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.
|