கதிர்காமம் திருவிழா நிமித்தம் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு இராணுவத்தினரால் ஒழுங்கு வசதிகள்

18th July 2017

கதிர்காமம் ஆலயத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து ஒவ்வொரு வருடமும் வருகை தரும் பக்தர்கள் சனிக்கிழமை (15)ஆம் திகதி பானம, ஓகந்த ஸ்ரீ முருகன் கோயில் பூஜையின் பின்பு கதிர்காமத்தை நோக்கி செல்லும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் வசதிகள் இந்த வருடம் மல்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள 24ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 242 படைத் தலைமையகம் ,23ஆவது இலங்கை சிங்க படையணியினரால் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.

பக்தர்களது தேவைகள் நிமித்தம் இராணுவத்தினர் மற்றைய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு 1000 லீட்டர் நீர் டாங்கிகள் 18 ஓகந்தவிலிருந்து குமண வரையிலான பிரதேசத்தில் வீதிகளின் இரு பக்கத்திலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் லாகுகல பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் நீர் வடிகால சபையினால் பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

நோயாளர் மற்றும் முதியோர்களான பக்தர்களுக்கு போக்குவரத்து சேவைகள், உணவுகளும் படையினரால் விநியோகிக்கப்பட்டது. 2017 ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி வரை பாதைகள் திறக்கப்பட்டிருக்கும். இன்று வரைக்கும் 4000க்கு அதிகமான பகதர்கள் வருகை தந்துள்ளனர்.

|