டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்காக மேலும் இராணுவத்தின் ஒத்துழைப்பு
17th July 2017
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 58ஆவது படைப் பிரிவு, 141, 142 படைத் தலைமையகம் மற்றும் 12ஆவது இலங்கை சிங்க படையணியைச் சேர்ந்த 300 அதிகமான படையினர் இணைந்து சனிக்கிழமை (15) ஆம் திகதி மஹரகம, கொலொன்னாவ, கடுவெல, பிலியந்தலை, நீர்கொழும்பு, களனி, அத்தனகல்ல, பியகம, பாணந்துறை, கெஸ்பேவ, மாவித்தர, தெல்தர மற்றும் திவுலுபிடிய உள்ளடக்கப்பட்ட பிரதேசங்களில் விஷேட டெங்கு ஒழிப்புத் திட்ட நிகழ்ச்சி இடம்பெற்றது.
டெங்கு ஒழிப்புத் திட்ட தேசிய நடவடிக்கைக்கு அமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமையில் முப்படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார அதிகாரிகள் மற்றும் அரச ஊழியர்களின் ஒத்துழைப்புடன் ஜூலை மாதம் முதல் கிழமை இந்த ஒழிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. டெங்கு ஒழிப்புத் திட்டத்தை ஒழிப்பதற்காக ஒரு மாத காலமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகத்தின் ஆலோசனைக்கு அமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களின் மேற்பார்வையில் இந்த நிகழ்ச்சி திட்டம் இடம்பெற்றது.
|