இலங்கைக்கான கனடிய உயர் ஆணையாளருக்கு யாழ்ப்பாண தளபதியின் அழைப்பு

17th July 2017

இலங்கைக்கான கனடிய ஆணையாளர் மேதகு ஷெல்லி விஹிடிங் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் போது யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியாரச்சியை பலாலி பாதுகாப்பு தலைமையக வளாகத்தினுள் உள்ள அலுவலகத்தில் சந்தித்தார்.

யாழ் பாதுகாப்பு தளபதி மற்றும் கனடிய ஆணையாளருக்கு இடையில் யாழ் குடா நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை ,இராணுவ பொதுமக்களது உறவுமுறையை மேம்படுத்துவது மற்றும் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் கனடிய அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் நடாத்திய வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துக்கள் இந்த சந்திப்பின் போது பரிமாறப்பட்டது. இறுதியில் படைத் தளபதியினால் கனடிய உயர் ஆணையாளருக்கு நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

|