இராணுவ பங்களிப்புடன் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சிறுவர்களுக்கு பரிசு பொதிகள் வழங்கும் நிகழ்வு

17th July 2017

களனி ரொட்டரி நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு அமைய கனடா ‘Sleeping Children Around the World’ (SCAW)இனால் ஜூலை மாதம் 06 தொடக்கம் 11ஆம் திகதி வரை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலையின் 6-12 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் உறங்கும் பொதிகள் உள்ளடக்கப்பட்ட 5000 பொதிகள் விநியோகிக்கப்பட்டது.

இதற்கமைவாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதேசங்களில் பல்வேறுபட்ட 6 நிலையங்களில் காலணி ஜோடிகள் , டி-ஷர்ட்,கால்சட்டை, பாடசாலை பைகள், நுளம்பு வலைகள், மெத்தைகள், தலையணைகள், பாய்கள், தலையணை உறை உள்ளடக்கப்பட்ட ரூ. 19250000.00 பெருமதியான பரிசு பொதிகள் வெல்லாவெளி மகா வித்தியாலயத்தில் திங்கட் கிழமை (10)ஆம் திகதி பகிர்ந்தலிக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு 24 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிஹே, கனடா SCAW குழுவின் தலைவி கெட் சென்டிபோட், களனி ரோட்டரி சமூக குழுவின் தலைவர் சரத் குணவர்தன SCAW மற்றும் களனி ரொட்டரி சமூகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர அவர்களது ஆலோசனைக்கு அமைய கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இந்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

|