2017ஆம் ஆண்டு பராஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தினேஷ் பிரியந்தவிற்கு வெள்ளிப் பதக்கம்
17th July 2017
2017ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் ஆண்களுக்கான F-46 போட்டி சனிக்கிழமை (15)ஆம் திகதி இடம்பெற்றது. இந்த போட்டியில் 3ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கோப்ரல் தினேஸ் பிரியந்த ஹேரத் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். இவர் 58.23 மீற்றர் நீண்ட துாரத்திற்கு ஈட்டியை எரிந்து இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். இவர் 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் திகதி இறுதி மனிதாபிமான நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் காயமுற்று வைத்திய காரணத்தின் நிமித்தம் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார்.
இலங்கைக்கு பரா ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது தடவையாக இந்த பதக்கம் கிடைக்கப் பெற்றுள்ளது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற பரா ஒலிம்பிக் ஆண்களுக்கான 400 F-46 போட்டியில் பிரதீப் சஞ்ஜய வெண்கல பதக்கத்தை பெற்றார். 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியிலும் தினேஸ் பிரியந்த வெண்கல பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
|