மனநலம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டது

14th July 2017

மனநல பணிப்பகத்தினால் “மகிழ்சியான வாழ்வு” எனும் தலைப்பின் கீழ் விழிப்புணர்பு பயிற்சிப் பட்டறையானது பனாகொடை இராணுவத் தலைமையகத்தில் (12) திகதி புதன் கிழமை இடம் பெற்றது.

அந்த வகையில் இப் பயிற்சிப் பட்டறையானது இராணுவ மனநல தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் எம் டி விஜேசுந்த அவர்களில் தலைமையில் இடம் பெற்;றது. நாடு முழுவதும் நுhற்றிற்கும் அதிகமான இவ்வாறான பயிற்சிப் பட்டறைகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ் விழிப்புணர்வூ பயிற்சிப் பட்டறையானது இராணுவ மற்றும் சிவில் விரிவுரையாளர்களினால் நிகழ்த்தப்பட்டதுடன் 04 இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் 120 இராணுவ வீரர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் மேஜர் யூ பி மல்லவாராச்சி கெப்டன் ஆ எம் ஆர் ஆர் கே இரத்நாயக லெப்டினன்ட் பி ஏ சி பி கே பேதுரு ஆராச்சி மற்றும் மது மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையத்தின் இணைப்பாளரான திரு அஜித் நவகமுவ போன்றௌரின் ஒத்துழைப்புடன் இராணுவ வீரர்களுக்கு இப் பயிற்சிப் பட்டறை நிகழ்த்தப்பட்டது.

|