இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் பௌத்த சமய நிகழ்வுகள்

11th July 2017

‘அதுகல் புரயயி தஹம் அமாவயி ‘ எனும் தலைப்பில் குருணாகல் வெஹரயில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி மூன்றாவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்ட வர்ண கூடுகள் உள்ளடக்கப்பட்ட பௌத்த சமய நிகழ்வுகள் மாலிகாபிடிய மைதானத்தில் ஜூலை மாதம் 8 ,9 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இராணுவம் மற்றும் சிவில் மக்களிடையே உறவு முறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்ன அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

சனிக்கிழமை (08)ஆம் திகதி இந்த சமய பௌத்த நிகழ்வுகள் பெரஹரவுடன் ஆரம்பமானது இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த படைத்தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்ன அவர்கள் மங்கள விளக்கேற்றுகளை ஏற்றி அங்கு அலங்கரிக்கப்பட்ட 50 வர்ண கூடுகளை பார்வையிட்டார்.

இந்த பௌத்த நிகழ்வுகளுக்கு பௌத்த பக்தர்கள் கூடுதலானோர் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு கிழக்கு முன் பராமரிப்பு பிரதேச கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மனோஜ் முதன்நாயக மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

|