பிரிகேட் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கான சர்வதேச மனிதாபிமான சட்ட இரண்டு நாள் பயிற்சிபட்டறை
11th July 2017
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வளாகத்தினுள் நடைபெற்ற ‘சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சவால்கள் ‘ தொடர்பான பயிற்சி பட்டறை இரண்டு நாட்கள் இராணுவ உயரதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அப்பிரதேசத்தில் கடமை புரியும் இராணுவ மூத்த அதிகாரிகள் 25 பேரின் பங்களிப்புடன் இந்த பயிற்சி பட்டறை இடம்பெற்றது.
மனித உரிமைகள் மற்றும் இராணுவத்தின் மனிதாபிமான சட்டம் மூலம் ஒருங்கிணைப்பு போன்ற விரிவுரைகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்பிரதிநிதியான சந்தன ஜயவர்தனவினால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது பதவிநிலை பிரதானி பிரிகேடியர் பீ.பி.எஸ் டி சில்வா வருகை தந்தார்.
|