முல்லைத்தீவு இராணுவ அங்கத்தவர்கள் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு

10th July 2017

முல்லலைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமை புரியும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் 350க்கு அதிகமானோர் வெள்ளிக்கிழமை (07)ஆம் திகதி இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முல்லைத்தீவு வைத்தியசாலை இரத்த வங்கியின் பிரதானி வைத்தியர் ரஜீத வீரவர்தனவின் வேண்டுகோளுக்கு அமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களின் ஆலோசனைக்கு அமைய இந்த இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

முல்லைத்தீவு வைத்தியசாலை இரத்த வங்கி சூழலில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம்,59,64,68 படைத் தலைமையம், முல்லைத்தீவு முன் பராமரிப்பு பிரதேசம் மற்றும் மற்றைய படையணியின் இராணுவ அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

|