கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஆண்டு பூர்த்தி விழா
7th July 2017
‘Victory Through Commitment, Dedication, Sacrifice & Professionalism’ தலைப்பின் கீழ் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 8 வது ஆண்டு பூர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் தலைமையின்; கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா சமய ஆசிர்வாத அனுஸ்டானங்களுடன், இரத்ததானம் வழங்குதல், மரக்கன்று நடுதல், புதிய சிற்றுண்டிச்சாலை மற்றும் நலன்புரி கடைத் தொகுதி திறந்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அத்துடன் அனைத்து இராணுவத்தினரது பங்களிப்புடன் பகல் விருந்தோம்பலும்; இடம்பெற்றது.
இந்த நிகழ்வு ஆரம்பிக்கும் போது பாதுகாப்பு படைச்சேனைக்கும் இராணுவ அங்கத்தவர்களை ஊக்குவிக்கும் முகமாக ‘Herculean Competition’போட்டிகள் பரவிபஞ்சான் விளையாட்டு மைதானத்தில் ஜூலை மாதம் 22 தொடக்கம் 24 வரை இடம்பெற்றது. அப் போட்டியில் 24வது கெமுனு ஹேவா படையணி வெற்றியினை பெற்றது.
ஆண்டு பூர்த்தி நிகழ்வினையிட்டு பௌத்த மத சமய சம்பிரதாய நிகழ்வுகளும், இந்து மத வழிபாடு பூஜைகள் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலிலும், கிறிஸ்தவ மத வழிபாடுகள் கிளிநொச்சி புனித திரேசா தேவாலயத்திலும், முஸ்லீம் மத வழிபாடுகளும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வையிட்டு இராணுவத்தினர்; 40 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு இரத்த தானத்தை வழங்கினார்கள். ஜூனி (29) திகதி நடைபெற்ற ஆண்டு பூர்த்தி விழாவிற்கு பிரதம அதிதியாக வருகை தந்த கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாமரக்கன்று நடுகை நிகழ்வு மற்றும் படைத்தளபதியுடன் இணைந்து குழு புகைப்படமும் எடுக்கப்பட்டது. பின்பு அன்றைய தினம் இரவு அனைவரது பங்களிப்புடன் விருந்தோம்பல் இடம்பெற்றது.
|