கிளிநொச்சி படையினர் லயன்ஸ் சங்கத்தின் உதவியுடன் சமூக சேவைப் பணிகளில் ஈடுபாடு

5th July 2017

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க பெலியகொட லயன்ஸ் சங்கத்தினரால் மூக்குக் கண்ணாடிகள் மற்றும் முச்சக்கர நாற்காலிகள் போன்றன கிளிநொச்சி பிரதேச தேவை நாட்டம் உடைய மக்களுக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை (02) வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் 57ஆவது படைத் தலைமையகம் மற்றும் 571 படைப் பிரிவானது 8ஆவது இலங்கைப் பீரங்கிப் படையணி மற்றும் இலங்கை படைக்கலச் சிறப்பணியின் ஒத்துழைப்புடன் ஒன்றினைத்து பங்காற்றியுள்ளது.

மேலும் 150 பாடசாலை சிரார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் , கண் கிளினிக்கு மூலம் கண்டறியப்பட்ட நோயாளர்களுக்கு 350 மூக்குக் கண்ணாடிகள் மற்றும் முச்சக்கர நாற்காலிகள் போன்றன பகிர்ந்தளிக்கும் நிகழ்வானது கிளிநொச்சி நெலும் பியஸ மண்டபத்தில் இடம் பெற்றது.

|