தேசிய பாதுகாப்பு படையணியின் ‘வர்ண இரவுகள்’
3rd July 2017
இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் அங்கத்தவர்களின் விளையாட்டு திறமைகளை மேன்படுத்துவதற்காக வர்ண இரவு நிகழ்வு ஜூன் மாதம் 29 மற்றும் 30ஆம் திகதி குருணாகல் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
தேசிய பாதுகாப்பு படையணி இராணுவத்தின் திறமையுள்ள விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளதுடன் இந்த வர்ண இரவு சேவையிலுள்ள மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களை கௌரவிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வருகை தந்த இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்ன அவர்களை இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் பிரதி கட்டளை தளபதி உட்பட சிரேஷ்ட அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டார்.
இராணுவ கலாச்சார குழுவினர்கள் இன்னிசை நடன நிகழ்வுகளை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து இராணுவ மட்டத்தில் , பாதுகாப்பு சேவை, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் திறமையை வெளிக்காட்டிய இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் 295 (சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற) இராணுவ அங்கத்தவர்களுக்குவர்ணங்கள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் கடந்த வருடங்களில் தாய்நாட்டை பிரதிநிதிதுவம் படுத்தி திறமையை வெளிக்காட்டிய 17 தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதம விருந்தினர் பரிசுகளை வழங்கினார்.
இந் நிகழ்விற்கு முன்னாள் ரெஜிமேன்ட் தளபதிகள், இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கவுன்சில் அங்கத்தவர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்விற்கு இராணுவ விளையாட்டுதுறை பணிப்பாளர் இராணுவ மேஜர் ஜெனரல் ரோஹன பண்டார இராணுவ தளபாட விநியோக கல்லுாரியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் எச் ஜி ஐ வித்தியானந்த விஜயபாகு காலாட் படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் டபிள்யு எஸ் ஆரியசிங்க தேசிய பாதுகாப்பு படையணியின் முன்னால் கட்டளைத் தளபதிகளான மேஜர் ஜெனரல் ஜி வி டி யு ஏ பெரேரா (ஓய்வு) மேஜர் ஜெனரல் ஏ எம் பி அமுனுகம (ஓய்வு) மேஜர் ஜெனரல் ஏ சி ஒபேசேகர (ஓய்வு) மேஜர் ஜெனரல் டபிள்யு டி எல் பி விக்கிரமசிங்க (ஓய்வு) பிரிகேடியர் எல் கே பி லால் வீரகோண் (ஓய்வு) பிரிகேடியர் ஜே வி சிரிவர்தன பிரிகேடியர் பேட்ரம் பிரிகேடியர் ஜி எம் எல் சந்திரசிரி போன்ற சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
|