இராணுவ அங்கத்தவர்களுக்கு நடைபெற்ற மரச்செய்கை பயிற்சிநெறி

3rd July 2017

தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ அங்கத்தவர்களுக்கு மூன்று மாத மரச்செய்கை பயிற்சி நெறி வெள்ளிக் கிழமை (30) திகதி முடிவடைந்தது.

நாம் நாட்டுவோம் -நாட்டை எழுப்புவோம் எனும் தலைப்பில் ஆரம்பமான தேசிய நிகழ்ச்சியின் கீழ் இந்த இராணுவ அங்கத்தவர்கள் 30 பேர் இந்த பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியின் மூலம் மரச்செய்கை சம்பந்தமான கூடுதலான விடயங்கள் கற்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக் கிழமை (30) திகதி அபேபுஸ்ஸ மாவட்ட விவசாய பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழா வைபவத்திற்கு இராணுவ பயிற்சி மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் எச்.ஈ.எம்.ஆர்.பீ.டி ஹத்னாஹொட, அம்பேபுஸ்ப மாவட்ட விவசாய பயிற்சி நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் திருமதி உத்பலா சமரகோன், பிரதி பணிப்பாளர் திருமதி பிரியங்கிகா, வல்பிட விவசாய பயிற்சி மத்திய நிலையத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி ரணசிங்க உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

|