இராணுவ தொழிற் பயிற்சி நிலையத்தினால் கண்ணாடி வழங்கும் நிகழ்வு
3rd July 2017
சாலியவெவையில் அமைந்திருக்கும் இராணுவ தொழிற் பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மூக்குகண்ணாடிகள் வழங்கும் நிகழ்வின் 5ஆம் கட்டமாக செவ்வாய்க் கிழமை (27) ஆம் திகதி ஹொரிவில மஹாமாய மண்டபத்தில் நடை பெற்றது.
இந் நிகழ்வில் இராணுவ தொழிற் பயிற்சி நிலையத்தின் பிரதி உதவி நிலையதிகாரி பிரிகேடியர் ரன்துல ஹத்தனகொட அவர்களின் ஒழுங்கமைப்பில் கண்டி ஒப்டிகள்ஸ் (தனி) நிறுவனத்தின் வைத்தியர் நிமால் வீரகோன் உட்பட ஊழியர்களினால் கண் சிகிச்சை நடமாடும் சேவையினால் பரிசோதனை நடத்தியதோடு குறைந்த செலவில் 166 பேருக்கு மூக்குகண்ணாடிகள் வழங்கப்பட்டது.
இராணுவ தொழிற் பயிற்சி நிலையத்தின் பிரதி உதவி நிலையதிகாரி, இராணுவ அதிகாரிகள், கண்டி ஒப்டிகள்ஸ் (தனி) நிறுவனத்தினரும்இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
|