தியதலாவையில் ஹயிலென்டர் ஹொல்வ் போட்டி

3rd July 2017

இராணுவ பயிற்சி கட்டளை (ARTRAC) இராணுவ ஹொல்ப் சபை மற்றும் இலங்கை ஹொல்ப் சங்கம் (SLGU) ஒழுங்கு செய்யப்பட்ட 2017ஆம் ஆண்டு ஹயிலென்டர் ஹொல்ப் போட்டி ஜூலை மாதம் (01) திகதி சனிக்கிழமை தியதலாவை இராணுவ எகடமி ஹொல்ப் மைதானத்தில் இடம்பெற்றது.

இராணுவ விளையாட்டு துறையில் புதிய இணைப்புடன்; இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கு அமைய இராணுவ ஹொல்ப் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் நந்த ஹதுருசிங்க அவர்களின் தலைமையில் இந்த போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டது.

இந்த திறந்த போட்டியில் நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற ஹொல்ப் விளையாட்டு வீரர்கள் 88 பேரும் இராணுவ ஹொல்ப் விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதலாவது இடத்தை சிறந்த ஹொல்வ் விளையாட்டு வீரரான ரொஹான் டி சில்வா பெற்றுக் கொண்டார்.

இறுதியில் தியதலாவை இராணுவ எகடமி அதிகாரி விடுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் 14 போட்டியாளர்களுக்கு வெற்றி கிண்ணங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், பணிப்பாளர் பிரதான பதவி நிலை ஜெனரல், மத்திய பாதுகாப்பு படைத் தளபதி, இராணுவ பயிற்சி கட்டளை தளபதி, முப்படை சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தேசிய மட்டங்களில் விருது பெற்ற ஹொல்ப் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

|