11ஆவது படைத் தலைமையகத்தினால் மீளாய்வு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக படைவீரர்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமாக செயலமர்வு

3rd July 2017

இயற்கை அனர்த்த மத்திய நிலையத்தினால் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 11 படைத் தலைமையகத்தினால் மீளாய்வு மற்றும் மீட்பு பணிகள் சம்பந்தமான செயலமர்வு கண்டியில் அமைந்துள்ள ரயிபல் படையணி தலைமையகத்தில் இடம் பெற்றது.

இந்த ஆரம்ப விரிவுரையை 11ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவக அவர்கள் ஆற்றினார். இந்த விரிவுரைக்கு 15 இராணுவ அதிகாரிகளும் 200 படை வீரர்களும் கலந்து கொண்டனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் முப்படை இணைப்பாளர் பிரிகேடியர் தீபால் வன்னியாரச்சி, பயிற்சி மற்றும் கல்வி பிரதி பணிப்பாளர் திருமதி சாரங்கி விதானகே மற்றும் கண்டி இயற்கை அனார்த்த மத்திய நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் இந்திக ரணவீர அவர்கள் இந்த சிறப்பு விரிவுரைகளை ஆற்றினார்கள்.

இந்த செயலமர்வில் அவசர இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதும் தங்களை தற்பாதுகாத்து கொள்ளல் சம்பந்தமான விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.

|