யாழ்ப்பாண பிரதேச மாணவர்கள் பலாலி விமான நிலையத்திற்கு விஜயம்

3rd July 2017

யாழ்ப்பாண, கோப்பாயி நாவலர் தமிழ் வித்தியாலய அதிபர் கே.தர்மசீலனால் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய விமானப்படையினருடன் தொடர்பாடலை மேற்கொண்டு இந்த பாடசாலை மாணவர்களுக்கு அதனை பார்க்ககூடிய அனைத்து வசதிகளையும் வெள்ளிக் கிழமை (30) யாழ்ப்பாண பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

ஆசிரியர்கள் எட்டு பேரும் 69 பாடசாலை மாணவர்களும் இந்த சுற்றுலாவிற்கு வருகை தந்தனர். இவர்களுக்கு இராணுவத்தினரால் ஆகாரங்கள் வழங்கப்பட்டது. அத்துடன் தல் செவன விடுமுறை விடுதியின் கட்டிடம் மற்றும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கும் விஜயத்தை மேற்கொண்டனர்.

|