படையினரால் டெங்கு ஒழிப்பு விசேட திட்டம் ஆரம்பம்
2nd July 2017
இராணுவப் படைத் தளபதியவர்களின் ஆலோசனைக்கமைவாக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களின் ஒத்துழைப்போடு நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்படும் விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு அமைவாக மேலும் ஓர் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம் கொழும்பு சுகததாச மைத்தான அன்மையில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலகத்தில் கடந்த திங்கட் கிழமை (01) காலை 0700 மணியளவில் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே உயர் பொலிஸ் அதிகாரிகள் மருத்துவ அதிகாரிகள் சுகாதார அதிகாரிகள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் பங்களிப்போடு இடம்பெற்ற இத் திட்டமானது எதிர்வரும் சனிக் கிழமை (08) வரை ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்படவுள்ளது.
அந்த வகையில் டெங்கு நோய்ப் பரவும் இடங்களைக் கண்டறிந்து சுத்தம் செய்ம்யு பணிகளில் இராணுவப் படையினர் 200பேர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 25 பேர் மற்றும் பொது மக்கள் சுகாதார பரிசோதகர்கள் 25 பேர் உள்ளடங்களாக 25 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்குளி பிரசேத்தில் நிலவுகின்ற டெங்கு நோய் பரவூம் இடங்களைக் கண்டறிந்து அதனை முற்றாக ஒழிக்கும் பணிகளை மேற்கொள்ள இக் குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
|