மாவனல்ல வறிய குடும்ப பெண்ணிற்கு புதிய வீடொன்று வழங்கப்பட்டது
1st July 2017
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 583ஆவது படைத் தலைமையக படையினரால் கொழும்பு விசாகா வித்தியாலய அனுசரனையுடன் மாவனல்ல, தெவனகலவில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயாரும் விதவை பெண்ணான டீ. எம் தமரா குமாரி அவர்களுக்கு (29)ஆம் திகதி புதிய வீடு வழங்கப்பட்டது.
58 ஆவது படைத் தளபதி மற்றும் 583 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியின் வழிக் காட்டலின் கீழ் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி இந்த கட்டிட நிர்மானிப்பு வேலைகள் ஆரம்பமானது. இந்த நிர்மான பணிகளை பொறியியலாளர் சேவை படையணி மற்றும் 8ஆவது சிங்க படையணி மேற்கொண்டது.
இந்த வீடு வழங்கும் நிகழ்விற்கு மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, மாவனல்ல பிரதேச செயலாளர், விசாகா வித்தியால அதிபர், ஆசிரியர் மற்றும் பாடசாலை மாணவர்கள் , வீட்டு உரிமையாளரின் உறவினர்கள், பிரதேச வாசிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
|