வருடாந்த கிறிஸ்தவ சபையினால் இராணுவத்திற்கு ஆசிர்வாத நிகழ்வு
1st July 2017
கிறிஸ்தவ சபை மற்றும் இராணுவ கிறிஸ்தவ சபை இணைந்து இராணுவ ஆசிர்வாத பூஜைகள் (30)ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொழும்பு மூன்றில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இராணுவ சேவையில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஓய்வூ பெற்ற அதிகாரிகளது பங்களிப்புடன் இடம் பெற்றது.
இந்த கிறிஸ்தவ பூஜைகளை வணக்கத்திற்குரிய பிதா பெனடிக் ஜோசப் அவர்கள் இராணுவத்திற்கான ஆசிர்வாதத்துடன் நடாத்தினார். அதன் பின்பு இராணுவ கிறிஸ்தவ சபையின் செயலாளர் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன வரவேற்புறையை ஆற்றினார்.
இந்த சிறப்பு பூஜைகள் ஒரு மணி நேரமாக நாட்டின் நிமித்தம் உயிர் தியாகம் செய்த படை வீரர்களின் ஆத்மா சாந்திக்காகவும், காணாமல் போன படை வீரர்களுக்காகவும் மற்றும் காயமுற்ற படை வீரர்களுக்கு ஆசீர்வாதம் பெறப்படும் பூஜையாக திகழ்ந்தது.
இந் நிகழ்வின் போது முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சி. எஸ் வீரசூரிய இராணுவ கிறிஸ்தவ சபை தொடர்பான பிரசங்கத்தை வழங்கினார். அதனை தொடர்ந்து நன்றியுறையை ஓய்வு பெற்ற கொமடோர் லகி மென்டிஸ் ஆற்றினார்.
இந் நிகழ்விற்கு இராணுவ கிறிஸ்தவ சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, இராணுவ சிரேஷ்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
|