வடக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் தமது 21ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடியது

30th June 2017

வடக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பல நிகழ்வுகளும் சமய அனுஷ்டானங்களும் மிக விமரிசையாக இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

வடக்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் கடந்த 16ஆம் திகதி காலை இந்து சமய வழிபாட்டு அனுஷ்டானங்கள் ஸ்ரீ கந்தன் கோவிலிலும் , ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாடுகளும் கடந்த 18ஆம் திகதி காலை கிறிஸ்தவ மத வழிபாடுகள் யாழ்ப்பாண சென் மேரிஸ் ஆலயத்திலும் அன்றைய தினமே சிறப்பு பௌத்த மத அனுஷ்டானங்களும் இடம் பெற்றன.

அதனைத் தொடர்ந்து கடந்த 19ஆம் திகதி திங்கட் கிழமை 10ஆவது பொறியியல் படையணியினரால் அணிவகுப்பு மரியாதை யாழ்ப்பாண படைத் தளபதிக்கு வழங்கப்பட்டது. படைத் தளபதியினால்; இத் தலைமையகத்தில் மர நடுகை நிகழ்வும் இடம் பெற்றது. அன்றய தினமே இப் படைத் தலைமைய தளபதியவர்களின் தலைமையில் 175இற்கும் மேற்பட்ட படையினரின் பங்களிப்போடு இரத்த தான நிகழ்வானது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களான வைத்தியர்; டி விஸ்வைதன் மற்றும் வைத்தியர் எ அரங்கன் போன்ரோரின் ஒருங்கிணைப்போடு இடம்பெற்றது.

மேலும் கடந்த வியாழக் கிழமை (22) தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வளாகத்தில் சிரமதான நிகழ்வுகள் இப் படையினரால் இடம் பெற்றதோடு இறுதியாக கடந்த வெள்ளிக் கிழமை(23 ) இன்னிசை நிகழ்ச்சியும் இப் படைத் தலைமையத்தில் இடம் பெற்றது.

|