முல்லைதீவு பாதுகாப்புப் படைத்தலைமையகம் தமது 8ஆவது ஆண்டு பூர்த்தியினைக் கொண்டாடியது
28th June 2017
முல்லைதீவு பாதுகாப்புப் படைத்தலைமையகத்தின் 8ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக இப் படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணாந்து அவர்களின் தலைமையில் இராணுவ மரியாதை அணிவகுப்பு மற்றும் மர நடுகை நிகழ்வுகள் போன்றன இடம் பெற்றன.
அதனைத் தொடர்ந்து பௌத்த மத அனுஷ்டானங்கள் கோகிலாய் சம்போதி விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ திஸ்ஸபுர குணரத்ன அவர்களின் தலைமையிலும் இந்து மத அனுஷ்டானங்கள் உட்டகரை சித்திவிநாயகர் கோவில் ஸ்ரீலஸ்ரீ இர பத்மகுமார குருக்கள் அவர்களின் தலைமையில் இஸ்லாமிய மத அனுஷ்டானங்கள் முல்லைவெலி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி பரீட் மற்றும் கிறிஸ்தவ மத அனுஷ்டானங்களுக்கமைவாக இரணபளை மாதா ஆலயத்தின் பாதிரியார் ஜோர்ச் போன்றௌரினால் நிகழ்த்தப்பட்டதுடன் இந் நிகழ்வில் முல்லைதீவு பாதுகாப்புப் படைத்தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெணாந்து உயர் அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
மேலும் நந்திக்காடால் பிரதேசத்தில் அமைந்துள்ள இப் படைத் தலைமைகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெணாந்து அவர்களின் தலைமையில் அணிவகுப்பு மற்றும் மா மர நடுகை நிகழ்வுகள் போன்றன இடம் பெற்றன.
முல்லைதீவு பாதுகாப்புப் படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் 5ஆவது இலங்கை கவசப் படையணி, 11ஆவது இலங்கை பொறியியலாளர் படையணி, 1ஆவது சமிக்ஞை படையணி, 12ஆவது இலங்கை காலாட்படையணி , 7ஆம் மற்றும் 19ஆவது கெமுனு ஹெவா படையணி 16ஆவது பொறியியலாளர் படையணி, 7ஆவது இலங்கை இராணுவ போர்க கருவிப் படையணி 6ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் சேவைப் படையணி ,20ஆவது (தொண்டர்) கெமுனு ஹேவா படையணி ,6ஆவது (தொண்டர்) இராணுவ புலனாய்வு படையணி, 25ஆவது (தொண்டர்) தேசிய பாதுகாப்பு படையணிகளின் படையினர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் இறுதியில் இப் படைத் தலைமைய கட்டளை அதிகாரியவர்களின் பங்களிப்போடு மதியபோசன விருந்துபசாரங்களும் இப் படைத் தலைமையத்தில் இடம் பெற்றது.
|