66 ஆவது படைப்பிரிவினரால் போசாக்கு உணவும் பாடசாலை உபகரணங்களும்

27th June 2017

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவினர்களினால் பாரமீ பல்கலைக்கழக மன்றத்தின் அனுசரனையோடும் பூனரின் பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கும் நன்கொடை வழங்கும் நிகழ்வு பூனரின் வன்னேரிக்குளம் மகாவித்தியாலயத்தில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வில் 66ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பெட்டிவலான அவர்களினால் பாரமீ பல்கலைக்கழக மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மூன்று இலட்சம் ரூபா செலவில் பூனரின் வன்னேரிக்குளம் மகாவித்தியாலயத்தின் 100 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும், அதே பிரதேசத்தின் 15 கர்ப்பிணி பெண்களுக்கு நுளம்பு வலை, சுடுநீர்போத்தள், பேபி சவர்க்காரம் மற்றும் போசாக்கு அடங்கும் உணவு பொதிகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக 66 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பெட்டிவலான கலந்து கொண்டதோடு 661,662 படைபிரிவின் கட்டளைத் தளபதிகளும் ,சிரேஷ்ட அதிகாரிகளும், பாடசாலை அதிபர் ,ஆசிரியர்களும், மாணவர்களும் மற்றும் பெற்றோர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

|