பேங்காக் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை இராணுவ அணி தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது

22nd June 2017

தாய்லாந்து ஓபன் டிராக் அண்ட் பீல்ட் சாம்பியன்ஷிப் 2017ஆம் ஆண்டிற்கான போட்டியில் இலங்கை இராணுவ அணி;;, தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து, மியன்மர், வியட்நாம், தைப்பி மற்றும் சிங்கப்பூர் வீரர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இலங்கை இராணுவ அணி விளையாட்டு வீர வீராங்கனைகள்; மற்றைய விளையாட்டு வீர வீராங்கனைகளை வீழ்த்தி ஒரு தங்கப்பதக்கம் மற்றும் மூன்று வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்த போட்டியில் இரண்டு இராணுவ வீரர்களும், இரண்டு இராணுவ வீராங்கனைகள்; கலந்து கொண்டு இந்த பதக்கங்களை பெற்றுக் கொண்டனர். இவர்களது விபரங்கள் கீழ்வருமாறு.

இலங்கை மின்சாரம் மற்றும் பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த ஆர்.ஏ.கே கருணாதிலக வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கை மின்சாரம் மற்றும் பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த எச்.கே.கே குமாரகே 400 மீற்றரில் தங்கப் பதக்கத்தையும், இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த சாதாரண போர் வீராங்கனையான யூ.கே.என். இரத்னாயக 3000 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த சாதாரண போர் வீராங்கனையான எச்.டீ.டீ லக்ஷானி முப்பாச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் இலங்கை விளையாட்டு சங்கத்திற்கு பெற்றுத்தந்துள்ளனர். இந்த தங்கப் பதக்கங்களை பெற்றுத் தந்த இராணுவ வீர வீராங்கனைகளை இலங்கை இராணுவ விளையாட்டு கட்டுப்பாட்டு சபை அதிகாரிகள் வரவேற்றனர்.

|