பேரனரத்தங்களில் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ‘ரங்கிரி ஸ்ரீ லங்கா’ சமுக அமைப்பு மற்றும் கெமுனு ஹேவா படையணியினர் இணைந்து உதவி

17th June 2017

கடந்த சில தினங்களில் இயற்கை பேரனர்த்ததினால் பாதிப்புக்கு உள்ளான இரத்னபுரி மாவட்ட எலபாத பிரதேச செயளகத்துக்கு உரிய கரங்கொட கிராம சோவக பிரிவில் 126 குடும்பங்களுக்கும் 250 குழந்தைகளுக்கும் உலர் உணவு பொருட்களும் பாடசாலை உபகரணங்களும் வினியோகம் செய்யும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (15) ஆம் திகதி கரங்கொட வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

கெமுனு ஹேவா படையணியினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வானது ரங்கிரி தம்ளு ரஜமகா விகாராதிபதி பூஜ்ய இனாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர் அவர்களின் தலைமையில் ‘ரங்கிரி ஸ்ரீ லங்கா’ சமுக அமைப்பின் அனுசரனையில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு ரங்கிரி தம்ளு அமைப்பின் செயளாளர், பிரதி பணிப்பாளர் நாயகம், பூஜ்ய தாணியகம ஆனந்த நாயக தேரர், ஊடக வானொலி உத்தியோகத்தர், அனுராத ரோஹன கபுகொடுவ, ஜனித் டி சில்வா, மற்றும் 8 ஆவது கெமுனு ஹேவா படையணியும் கலந்துகொண்டனர்.

|