இராணுவ படைக்கல விநியோக கல்லுாரியின் 4ஆவது பயிற்சிநெறி ஆரம்பம்
16th June 2017
இராணுவ படைக்கல விநியோக கல்லுாரியின் நான்காவது இலக்க பயிற்சிநெறி (LSC) 12ஆம் திகதி கல்லுாரி கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
ஒருவருட காலமாக இடம்பெறும் இந்த பயிற்சி நெறிக்காக நேபாளம், பங்களாதேசம் பிரதிநிதிதுவப்படுத்தி வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட 34 இராணுவ அதிகாரிகள் இந்த பயிற்சி நெறிகளில் இணைந்துள்ளனர். பயிற்சி நெறியின் ஆரம்ப விரிவுரையை இராணுவ படை விநியோக கல்லுாரியின் கட்டளை தளபதி பிரிகேடியர் எச்.ஜி.ஐ வித்தியானந்தஅவர்கள் ஆற்றினார்.
சிறந்த ஆலோசனை அதிகாரிகளினால் நடாத்தப்படும் இந்த பயிற்சி நெறியானது 2018ஆம் ஆண்டு மே மாதம் முடிவு பெறவுள்ளது.
இந்த பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்விற்கு இந்த பயிற்சி கல்லுாரியின் பிரதான விரிவுரையாளர் கேர்ணல் ஜே.ஏ.ஆர்.எஸ்.கே ஜயசேகர உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
|