இராணுவ தொழில் பயிற்சி நிலையத்தினால் இரத்த தானம் மற்றும் நடமாடும் சேவை

15th June 2017

பொசொன் தினத்தினை முன்னிட்டு சாலியவெவ கலாஓயா பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ தொழில் பயிற்சி நிலையத்தினால் (CAVT) அனுராதபுர வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினரின் வேண்டுகோலிற்கிணங்க இரத்தானம் வழங்கப்பட்டது.

இராணுவ தொழில் பயிற்சி நிலையத்தின் (CAVT) கட்டளை அதிகாரி பிரிகேடியர் ரண்துல ஹத்ணாகொட அவர்களின் ஆலோசனைக்கமைய அனுராதபுர வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்வில் மேற்படி பயிற்ச்சி நிலையத்தின் 121 இராணுவ வீரர்கள்மற்றும் பொது மக்களும் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து (CAVT) யினர்கண் தொடர்பான நடமாடும் சேவையினை ஜயகம, துலண, பொசேவன போன்ற பிரதேசங்களில் ஜுன் மாத முதல் வாரத்தில் தொடங்கியுள்ளனர்.

மேலும் கண்டி கண் பரிசோதனை செய்யுமிடத்தினரின் (ஒப்டிகள்ஸ்) நன்கொடையின் மூலம்; 500 வறிய குடும்பத்தினைச் சேர்ந்த மக்களுக்கு 128 மூக்குக் கண்ணாடிகள் வைத்தியர் நிமல் வீரகோண் அவர்களினால் நடாத்தப்பட்ட கண் பரிசோதனை முகாமின் போது வழங்கப்பட்டன. இந் நிகழ்வு மாலை 0400 மணிவரை இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரிகேடியர் ரண்துல ஹத்ணாகொட மற்றும் சில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

|