ஹெமுனு ஹேவா படையணியின் புதிய படைத் தளபதி பதவியேற்பு

13th June 2017

ஹெமுனு ஹேவா படையணியின் 13 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து சனிக்கிழமை (10) ஆம் திகதி குருவிடவில் அமைந்துள்ள தலைமையகத்தில் பௌத்த சமய அனுஷ்டானங்களுடன் உத்தியோக பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதியை ஹெமுனு ஹேவா படையணியினர் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றனர். பின்பு தலைமையக வளாகத்தினுள் படைத் தளபதியினால் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து தலைமையகத்தில் உள்ள இராணுவத்தினருடன் தேநீர் விருந்தோம்பல் நிகழ்விலும் பங்கேற்றார். மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து ஹெமுனு ஹேவா படைத் தளபதியாகவும், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியாகவும் கடமை வகிக்கின்றார்.

இந் நிகழ்விற்கு ஹெமுனு ஹேவா சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அநுஷா பெர்ணாந்து, குடும்ப அங்கத்தவர்கள், 22 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

|