ரணவிரு வளமையத்தின் நான்காவது நினைவு தினவிழா

13th June 2017

இலங்கை இராணுவத்தின் அனைத்து படையணிகளில் உள்ளஅங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு தொழில் தகைமை பயிற்சிகள் ஆரம்பித்து வைக்கும் நோக்கத்துடன் இந்த ரணவிரு மையம் ஆரம்பிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி தனது நான்காவது நினைவு தினகொண்டாடத்தை களனி ரஜமஹ விகாரையில் பௌத்த சமய அனுஷ்டானங்களுடன் கொண்டாடியது.

இந்த வருடாந்த நிகழ்வையிட்டு ரணவிரு வள மையத்தின் கட்டளை அதிகாரி டப்ள்யு.எச்.எம். மனதுங்க அவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்பு கட்டளை அதிகாரியினால் ரணவிரு மைய வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து கட்டளை அதிகாரி ரணவிரு மைய முகாமில் உள்ள அனைவருடனும் ஒன்று கூடி தேநீர் விருந்தோம்பலில் கலந்துகொண்டார்.

இந்த ரணவிரு மையத்தினால் இது வரைக்கும் மின்சார உபகரணங்கள் புதுப்பித்தல், அலுமினியம், தோட்டஅலங்காரம்,​ கைத்தொழைபேசி, களனி இயந்திரம் திருத்தல்,, தலைமுடி அலங்காரம் மற்றும் முச்சக்கரவண்டி திருத்தும் பயிற்சி கற்கைநெறிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

|