யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவ மாணவர்களினால் புளத்சிங்கள பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்
11th June 2017
யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்தின் 14 மாணவர்களினால் முன்னால் யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தளபதியும் தற்பொழுது இராணுவ பதவி நிலை அதிகாரியான மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயகவின் ஒத்துழைப்புடன் கொழும்புக்கு வருகை தந்து பேர் அனர்தங்களில் விபத்துக்குள்ளான புளத்சிங்கள, யடிகம்பிடிய கனிஷ்ட்ட வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (09) ஆம் திகதி பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார்கள்.
இந்த பல்கலைகழக மாணவர்களினால் 3 இலட்சம் பெறுமதியான பாடசாலை உபகரணங்களும் பாடசாலையின் மீள் நிர்மாணிப்பு பணிகளுக்காக 30,000 ரூபாவும் வழங்கப்பட்டது.
இந்த பல்கலைகழக மாணவர்களினால் இதற்கு முன்பும் புளத்சிங்கள பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடை வழங்கப்பட்டது. இரண்டாவது தடவையாக மருத்துவ பல்கலைகழக மாணவர்களின் ஒத்துளைப்புடன் இந்த நன்கொடை வழங்கப்பட்டது. இராணுவ சமாதான நடவடிக்கை உதவி பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரியினால் இந்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது.
|