அரந்தலாவில் யாத்திரைகளுக்கான தங்குமிட மண்டபம் 24 ஆவதுபடைப் பிரவினால் நிர்மானிப்பு
9th June 2017
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களது ஆலோசனைக்கு அமைய கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 24 ஆவதுபடைப் பிரிவிற்குரிய பொறியியலாளர் படையணி, 16 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினர் இணைந்து அரந்தலாவ விகாரையில் யாத்திரைகளுக்கான புதிய தங்குமிட மண்டபம் நிர்மானித்தனர்.
எல்டிடிஈ பயங்கரவாத தாக்குதலில் மரணமடைந்த தலைமைத் தேரரான ஹெஹொட இந்திரசாரமத குரு உட்பட பிரபல பௌத்த தேரர்களை நினைவு படுத்தும் முகமாக அரந்தலாவ ஸ்ரீ இந்திரசார பௌத்த மத்திய நிலையத்தின் விகாராதிபதி புண்ணிய கிரிந்தி வெலசோமரத்ன தேரர் அவர்களின் வழிக் காட்டலின் கீழ் 122 மீற்றர் அகலத்திலும் 42 அடியிலும் யாத்திரைகளுக்கான தங்குமிட மண்டபம் நிர்மானித்தார்கள்.
இந்த நிர்மான பணிகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தனசேனாதீர, 24 ஆவதுபடைப் பிரிவின் படைத் தளபதிமேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது மேற்பார்வையில் இடம்பெற்றது.
|