“ஆரோக்கியமான இராணுவத்தில் -ஆரோக்கியமானவை”எனும் நிகழ்ச்சி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில்

6th June 2017

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களின் வழிக் காட்டலின் கீழ் இந்த நிகழ்ச்சி மே மாதம் (31) ஆம் திகதி அம்பசெவன பாதுகாப்புபடைத் தலைமயக வளாகத்தினுள் இடம் பெற்றதுடன் இந்த நிகழ்விற்கு 116 அதிகாரிகளும் 1030 இராணுவ படைவீரர்களும் கலந்துகொண்டனர்.

தடுப்பு மருந்து மற்றும் மனோதத்துவ சுகாதார சேவையின் பணிப்பாளர் பிரிகேடியர் ஏ.எஸ்.எம்.விஜேவர்தன மற்றும் கேர்னல் ரொசான் மொனராகல உட்பட இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் ஆலோசனைக்கு அமைவாக இந்த கருத்தரங்கு இடம்பெற்றது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின் ஆலோசனைக்கமைய இராணுவ வைத்தியசாலையின் தலைமையில் இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டது.

|