அமெரிக்காவின் பசுபிக் கட்டளை (MCIP) கருத்தரங்கு நிறைவு
3rd June 2017
பாதுகாப்பு அமைச்சு இலங்கை இராணுவம் மற்றும் அமெரிக்கா பசுபிக் இணைந்து (USPACOM) நடாத்தும் ‘Multinational Communication Interoperability Programme’ (MCIP) எனும் கருத்தரங்கு 3ஆவது முறையாக 17 நாடுகளை முன்னிலைப்படுத்தி 39 வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் உள்ளடங்களான 50 அதிகாரிகளின் பங்கேற்புடன் இடம் பெற்ற 5 நாள் கருத்தரங்கானது (02)ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் முடிவுற்றது.
மேற்படி கருத்தரங்கில் இலங்கை சமிக்ஞை படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் பி எச் எம் ஏ அஜித் விஜேசிங்க, கேணல் ஜேம்ஸ் மக் கலிஸ்டர், மெலனி வொசர் அம்மனி போன்ற உயர் அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம் பெற்றதுடன் லெப்டினண் கேணல் அசோக குணசேகர, லெப்டினண் கேணல் தம்மிக விதானரால, மெசஸ் டொம் கிராண்ட, எரிக் அண்டசன் போன்றௌர் உள்ளடங்களாக பல உயர் அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
|