மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி ஓய்வு

3rd June 2017

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் பி யூ எஸ் விதானகே 35 வருட இராணுவ பயணத்தின் முழுமையான சேவை ஓய்வினை எய்தும் நிகழ்வானது கடந்த வெள்ளிக் கிழமை (2) இடம் பெற்றது.

மேலும் இராணுவ விதிமுறைகளுக்கமைவாக இப் படைத் தலைமையத்தின்18 ஆவது கெமுனு ஹேவா படையினரால் இராணுவ மரியாதை அணிவகுப்பு இடம் பெற்றதுடன் இந் நிகழ்வில் 11 ஆவது மற்றம் 12ஆவது படைத் தலைமையகங்களின் கட்டளை அதிகாரிகள் 111 படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் இறுதியில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.

|