ஜக்கிய அமெரிக்க கெடெற் அதிகாரிகள் இலங்கைக்கான விஜயம்
1st June 2017
US Army Reserve Officers' Training Corps(AROTC) பயிற்சி பெறும் இராணுவ கெடெற் அதிகாரிகள் 33 பேர் மற்றும் 4 ஆலோசனை அதிகாரிகள் இலங்கைக்கு 14 நாள் விஜயத்தினை மேற்கொண்டனர்.
இலங்கை இராணுவத்தினால் இந்த கெடெற் அதிகாரிகளுக்கு 2017 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 7 ஆம் திகதி வரை தியதலாவையில் துப்பாக்கி பயிற்சி, அப்பியாச பயிற்சிகள், விரிவுரைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த கெடெற் அதிகாரிகள் இலங்கையில் இருக்கும் காலப் பகுதிகளில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், இலங்கை பொறியியலாளர் மத்திய நிலையம், இலங்கை காலாட் படை தலைமையகம் மற்றும் மின்னேரி பீரங்கிப் படை பயிற்சி பாடசாலைகளுக்கு சுற்றுலாவை மேற்கொள்ளுவார்கள்.
|