படையணிகளுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு போட்டியில் கெமுனு ஹேவா படையணிக்கு வெற்றி

1st June 2017

இராணுவ துப்பாக்கி சங்கத்தினால் ஓழுங்கு செய்யப்பட்ட படையணிகளுக்கு இடையிலான துப்பாக்கி சூட்டுப் போட்டி மே மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை தியதலாவை துப்பாக்கி சூட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டிக்கு இராணுவத்தின் 20 படையணியின் தலைமையில் 40 இராணுவ குழுக்கள் கலந்து கொண்ட இடையில் கெமுனு ஹேவா படையணி சிறந்த துப்பாக்கி சூட்டு படையணியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியினை தழுவியது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் உபுல் விதான கெமுனு ஹேவா படையணிக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி கௌரவித்தார்.

|