இராணுவ இணைப்புடன் கிளிநொச்சி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகள்
1st June 2017
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய பண்பு மகிழ்ச்சி மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் மல்லாவி, பூநகிரி மற்றும் விஸ்வமடு பிரதேசத்தில் உள்ள 100 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை 30 ஆம் திகதி நெலும்வெவ பியச கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களுடன் பண்பு மகிழ்ச்சி மன்றத்தின் நடவடிக்கை நிர்வாகி ஆனந்த ஜயவர்தனவின் பங்களிப்புடன் இந்த பாடசாலை மாணவர் ஒருவருக்கு 3500 ரூபாய் பெருமதியான அன்பளிப்பு பொருட்கள் வழங்கியதுடன் இதற்கு மேலாக ஒவ்வொரு மாணவருக்கும் 1000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டது.
|