2017 ஆம் ஆண்டு புதிய நிர்மாண கண்காட்சி திறப்பு விழா

28th May 2017

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனவின் மேற்பார்வையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழியங்கும் படைப் பிரிவு, படையணிகளில் திறமையுள்ள இராணுவ வீரர்களினால் நிர்மானிக்கப்பட்ட கண்காட்சிகள் 26 ஆம் திகதி காலை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியினால் நெளும் பியச கேட்போர் கூடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின் பணிப்புரைக்கு அமைய இராணுவத்தினரின் நிர்மான திறமையை மேன்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இதற்கு முன்பதாக யாழ்ப்பாணம், வன்னி படைத் தலைமையகங்களில் நிர்மானிக்கப்பட்டு கண்காட்சியிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 30 படையணி, 10 படைத் தலைமையகம், மற்றும் 3 படைப் பிரிவுகள் இந்த நிர்மான கண்காட்சிக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது. மேலும் வீட்டு பாதுகாப்பு கருவி, புதிய மரக்கறி வெட்டும் இயந்திரங்கள், ட்ரான்ஸ் மிஷன் இயந்திரங்கள் இந்ந கண்காட்சியில் இராணுவ படையினரால் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்விற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் வெலிகன்ன, கிளிநொச்சி முன் நடத்தல் பிரதேச கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிமல் விதானகே, 57,65,மற்றும் 66 ஆவது படைப் பிரிவு கட்டளை தளபதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், படை வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியானது பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக 27 ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்படும்.

|