சுவிச்சர்லந்து துாதுவர் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியை சந்திப்பு

28th May 2017

இலங்கையின் மாலைதீவு சுவிச்சர்லந்து துாதுவர் மதிப்புக்குரிய ஹயின்ஷ் சோகர் 29 ஆம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

கிளிநொச்சி பாதுகாப்புபடைத் தளபதி இப் பிரதேசத்தில் நிலவும் அபிவிருத்தி திட்டம் பாதுகாப்பு நிலைமை சம்பந்தமாகவும் பொதுமக்கள் மற்றும் இராணுவத்திற்கு இடையிலான நல்லினக்க உறவு சம்பந்தமான விடயங்களை துாதுவருக்கு தௌிவுபடுத்தினார்.

இறுதியில் சுவிச்சர்லந்து துாதுவர் மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதிக்கு இடையில் நினைவு சின்னம் பரிமாறும் நிகழ்வு இடம்பெற்றது.

|