தேசிய நீச்சல் போட்டியில் இராணுவ வீர வீராங்கனைகள் திறமையை வெளிக்காடடியூள்ளனர்

15th May 2017

2017 ஆம் ஆண்டிற்கான தேசிய நீச்சல் போட்டிகள் மே மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் சுகததாஸ உள்ளரங்க நீச்சல் தடாகத்தில் 1000 போட்டியாளர்களின் பங்களிப்பில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் இலங்கை இராணுவ ஆண் பிரிவூ முதலாவது இடத்தையூம் பெண்கள் அணி இரண்டாவது இடத்தையூம் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை நீர் விளையாட்டு சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட (SLASU) இந்த போட்டியில் முதலாவது அணி 18 வயதுக்கு மேற்பட்டவர்களும், இரண்டாவது அணியில் 18 வயதுக்கு குறைந்தவர்களும் , மூன்றாவது அணியில் 15 வயதுக்கு குறைந்தவர்களும், 4 வது அணியில் 13 வயதிற்கு குறைந்தவர்களும், 5 வது அணியில் 11 வயதிற்கு குறைந்தவர்கள் என ஐந்து வகையாக இந்த அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் போது இலங்கை இராணுவ ஆண் அணி 12 தங்கப் பதக்கங்களையூம், 12 வெள்ளிப் பதக்கங்களையூம், 11 உலோக பதக்கங்களையூம் பெண் அணியினர்; 07 தங்கப் பதக்கங்களையூம், 07 வெள்ளிப் பதக்கங்களையூம், 05 உலோக பதக்கங்களையூம் பெற்றுள்ளனர்.

|